இயக்குனர் அட்லி மீது பிரபல நடிகை பகீர் புகார்..! - அட்லியா இப்படி செய்தது..? - ரசிகர்கள் ஷாக்

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் கதிர், ஜாக்கி ஷெரப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கால்பந்தாட்ட கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த தனியார் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் மீது துணை நடிகை கிருஷ்ணதேவி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது தனது புகார் மனுவில், நான் சினிமா துறையில் துணை நடிகையாக இருக்கிறேன். தனியார் பிலிம் சிட்டில் அட்லீ இயக்கும் படத்தில் பணிபுரிந்தேன். படப்பிடிப்பில் அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். தரக்குறைவான வார்த்தைகளை பேசி என்னை பணி செய்ய விடாமல் வெளியேற்றிவிட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள், அட்லியா இப்படி பேசியது...? எங்களால் நம்பவே முடியவில்லை. இயக்குனர் அட்லி இது குறித்த விளக்கத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.