கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், இசையமைப்பாளர், நடிகை என
பன்முக திறமையினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
சூர்யா ஜோடியாக
தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவின்
முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.
மேலும் நடிப்பது மட்டுமல்லாமல்
சமூக வலைதளங்களிலும் பிஸியாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து
வருகிறார்.
அதன்படி நீண்ட காலம் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர்
விஜய்சேதுபதியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதால் செம்ம
குஷியில் குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அத்துடன் பருந்து தரை இறங்கியது, இனிமேல், முழு வீச்சில் வேலை தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags
Cinema