ஆட்டோகிராஃப் 2 வருமா..? - ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த இயக்குனர் சேரன்..!


சேரன் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்த படம் ஆட்டோகிராப். 2004-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கோபிகா, சினேகா உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்தனர்.

தேசிய விருது, தமிழக அரசு விருது மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது என பல விருதுகளைக் குவித்த படம் ஆட்டோகிராப். சேரனின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு உலகளாவிய பெருமையைத் தேடிக் கொடுத்த படம் என்று கூட சொல்லலாம். 

இதற்கு பிறகு ஆட்டோகிராப்-2 படத்திற்கும் திட்டமிட்டார். ஆனால் அச்சமயத்தில் அப்படம் கைவிடப்பட்டது.

திருமணம் படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் இயக்கம் குறித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வரும் சேரன், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

அந்தவகையில் ஆட்டோகிராப் 2 வாய்ப்பு இருக்கிறதா சார்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக வரும் என்று பதிலளித்துள்ளார் சேரன்.
------Advertisement------
------Advertisement------