அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நாயகியாக நடித்தவர் புரூனா அப்துல்லா.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்தவர்
பின்னர் நடிகையானார்.
சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கும்
ஸ்காட்லந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் சமீபத்திலதான்
திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே புரூனா
அப்துல்லா கர்ப்பம் அடைந்துள்ளார்.
இது பற்றிய தகவலை அவரே
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு
குழந்தை பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில்
திருமணத்திற்கு முன்பே குழந்தை பெறுவது பற்றி அவர் பதிலளிக்கையில்,
திருமணச் சான்றிதழ் என்பது ஒரு பேப்பரைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று
கூறியிருந்தார்.




