ஒரே வாரத்தில் முக்கியமான படத்தின் வசூல் சாதனையை தகர்த்த அவெஞ்ஜர்ஸ்- எண்ட் கேம்..!

Avengers Endgame தற்போது அனைவரின் மனதில் நீங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் படம். உலகம் முழுக்க வெளியாகியுள்ள இப்படம் பார்த்தோரை புரட்டி போட்டுவிட்டது. வசூலில் தாறுமாறு செய்துகொண்டிருக்கிறது.

இதில் சீனாவில் உழைப்பாளர்கள் தினமான நேற்று $73.72 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. மேலும் $459.36 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது.

இதன் மூலம் மற்றொரு முக்கிய படமான The Fast And Furious படத்தின் வசூலான $ 393 மில்லியன் டாலர்களை முந்தியுள்ளது. பெஸ்ட் கலெக்‌ஷன் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

வட அமெரிக்காவில் $ 430 மில்லியன் டாலர்களை அள்ளியுள்ளது. உலகளவில் $ 1.05 பில்லியன் டாலர்களை பெற்று மொத்தம் வசூல் $ 1.48 மில்லியன் டாலர்களை பெற்று பெரும் சாதனை செய்துள்ளது.