தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து ரஷ்யாவை
சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதல் திருமணம் செய்து
செட்டில் ஆனார்.
இந்நிலையில் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன்
தற்சமயம் லண்டன் சென்றிருக்கும் ஸ்ரேயா, ஓவியம் ஒன்றின் முன்னால் நடனமாடி
அந்த ஓவியத்தில் உள்ள மனிதரை குரங்காக மாற்றும் விளையாட்டை
விளையாடியுள்ளார். மேலும் அதனை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags
shreya saran