மனுவிலேயே நடிகையின் பெயரை மறைமுகமாக குறிப்பிட்ட விஜய்யின் மனைவி சங்கீதா!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவில், 2021 ஏப்ரல் மாதம் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

( குறிப்பு : இந்த செய்தியில் குறிபிட்டுள்ள நடிகையின் பெயரை வெளியிடாமல், வாசிப்போரின் யூகத்திற்கே விட்டு விடுகிறோம், விவாகரத்து மனுவில் நடிகர் விஜய் அவர்களின் மனைவி குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் அந்த தேதியில் விஜய்யை சுற்றி எழுந்த சர்ச்சை மற்றும் சக செய்தி ஊடகங்களில்  வெளியான செய்தி ஆகியவற்றை அடிப்பபடையாக கொண்டது. இந்த நடிகையின் பெயர் தவறாகவும் இருக்கலாம், வேறு நடிகையாக கூட இருக்கலாம் என்பதையும் தெளிவு படுத்துகிறோம்)

இந்தக் குறிப்பிட்ட தேதி மற்றும் மாதத்தை சுட்டிக்காட்டியதால், அந்த நடிகை யார் என்பது பொதுவெளியில் விவாதமாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் (2021 ஏப்ரல்) தங்கும் விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், நடிகை ஒருவர் விஜயின் வீட்டிலும், அவரது நெருங்கிய நண்பர் சஞ்சீவ் வீட்டிலும் மாறி மாறி தங்கியதாகவும், அவரது கார் சஞ்சீவ் வீட்டு பார்க்கிங்கில் நின்றதாகவும் ஒரு தனியார் செய்தி நிறுவனம் வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்காக விஜய் தரப்பில் மிரட்டல் வந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேலும், பாண்டிச்சேரியில் ஒரு படப்பிடிப்பின்போது விஜயும் அந்த நடிகையும் ஒரே அறையில் தங்கியதாக படக்குழுவினர் தெரிவித்ததாக, பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முதல்வர் வேட்பாளராக சந்திக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் விஜயின் அரசியல் பயணத்தை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பெண் வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு குறைய வாய்ப்புள்ளது. அரசியல்வாதியாக இருப்பதால், இது குறித்து விஜய் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இல்லையெனில், எதிர்க்கட்சியினர் இதை ஆயுதமாக்கி பயன்படுத்தலாம்.

விஜய் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. நீதிமன்ற விசாரணையில் அவர் எப்படி பதிலளிப்பார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : Actor Vijay's wife Sangeetha has filed for divorce in Chengalpattu family court, alleging an extramarital relationship with an actress since April 2021. Speculation links actress Keerthy Suresh due to reports of her staying at Vijay's residence during COVID restrictions that month, though unconfirmed. The couple, married since 1999, have been living separately recently.