ஒரே நேரத்தில் அம்மா-மகள் இருவரையும் மயக்கி ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர்..! - பரபரப்பு தகவல்

சேலத்தில் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் அம்மா-மகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் அழகாபுரி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் நல்லதம்பி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த மசாஜ் சென்டருக்கு வரும் இளம்பெண்களிடம் பேசி, பழகி பின்னர் அவர்களுடைய செல்போன் எண்களை வாங்கி கொள்கிறார். 

பின்னர் அவர்களிடம் வீடியோகால் செய்து பேசி ஆசை வார்த்தைகளையும் ஆபாச வார்த்தைகளையும் கூறி மயக்கியுள்ளார். பின்னர் அந்த வீடியோகாலை காண்பித்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இவரிடம் சிக்கிய பல பெண்களில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அவருடைய மகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்த தகவல் மசாஜ் சென்டரில் வேலை செய்யும் மற்ற ஊழியர்களுக்கு தெரிய வர, அவர்கள் நல்லதம்பியை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் நல்லதம்பியை கைது செய்ததோடு, அவரை அடித்து உதைத்ததாக 10 பேர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Previous Post Next Post