கணவனுடன் கவர்ச்சி உடையில் நடிகை சமந்தா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

கணவர் நாக சைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்ற சமந்தா கவர்ச்சி உடையில் வெட்ட வெளியில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அண்மையில், இவரது நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் மாஸ் ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழைப் போன்று தெலுங்கில் கணவர் நாக சைதன்யாவுடன் முதல் முறையாக இணைந்து மஜிலி என்ற படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.70 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ஓ பேபி மற்றும் மன்மதுடு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் வெட்ட வெளியில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். 

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.