தல அஜித், தளபதி விஜய் இருவருமே நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள்.
இவர்கள் நல்ல நண்பர்கள் என்றாலும், ரசிகர்களுக்குள் எப்போதும் மோதல்
வெடித்துக்கொண்டே தான் இருக்கும்.
இந்நிலையில் விஜய்யை வைத்து வசீகரா
படத்த இயக்கிய செல்வபாரதி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார், அதில் பல
சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.
இதில் குறிப்பாக அஜித் படம் வில்லன்
வந்த போது விஜய் படத்தில் ‘நீ பேர் வச்சா தான் வில்லன், நான் எப்போவுமே
வில்லன்டா’ என்ற வசனம் இருந்ததாம்.
அதை விஜய்யே ‘அண்ணே இதெல்லாம் வேண்டாம், இப்படியான வசனங்கள் தவிர்க்கலாமே!’ என்று கூறி மறுத்ததாக செல்வபாரதி கூறியுள்ளார்.