தன்னை விட 14 வயது குறைவான இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நயன்தாரா! பார்த்து பதறும் நெட்டிசன்ஸ்!
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஹாய்’ படத்தில் கவினுடன் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், அடுத்ததாக ஒரு வெப் சீரிஸில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெப் சீரிஸில் தன்னை விட 14 வயது குறைந்த இளம் நடிகருடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கவிருப்பதாக செய்தி பரவியதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி வேகமாக பரவியது. “நயன்தாராவுக்கு இப்போது வயது 41-ஐ கடந்துவிட்டது. 14 வயது இளைய நடிகருடன் ரொமான்ஸ் காட்சி எப்படி?” என்ற கேள்விகள் எழுந்தன. சிலர் இதை விமர்சித்தனர். வேறு சிலர் நயன்தாராவின் நடிப்புத் திறனை நம்பி காத்திருப்பதாக கூறினர். இந்த சூழலில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்தான் ரசிகர்களை சற்று ஆசுவாசப்படுத்தியுள்ளது. அந்த ரொமான்ஸ் காட்சி சிறுவயது ப்ளாஷ் பேக் காட்சி என்பதால் இது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கதாபாத்திரத்தின் இளமைக்கால நினைவு காட்சியாக இது அமைக்கப்பட்டுள்ளது. இளம் நடிகர் அந்த கதாபாத்திரத்தின் இளம் வயது பதிப்பை ஏற்று நடிக...