விஜய்க்கு ஜோடியான பேட்ட நடிகை..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மாளவிகா மோகன். சமூக வலைதளத்தில் இவர் சர்ச்சையில் சிக்கி அண்மையில் பிரபலமாகிவிட்டார்.

விசயம் என்னவெனில் குட்டையான உடையில் அவர் உட்கார்ந்திருப்படி வந்த வீடியோவை சமூக வலைதளத்தில் சிலர் கேலி செய்தனர். இந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலடியும் கொடுத்திருந்தார்.

தற்போது தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தொடர் ஹிட் கொடுத்து வரும் இளம் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இக்கதை 2020 ல் வெளியாகவுள்ளது. ஆனந்த் அண்ணாமலை இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகிறதாம்.இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.