சினிமா நடிகர்களை கடவுளாக பார்க்கும்
ரசிகர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஹீரோக்கள் திரையில்
செய்வதை அப்படியே தங்கள் வாழ்க்கையிலும் செய்கின்றனர்.
பாலிவுட்
நடிகர் அஜய் தேவ்கன் ஒரு பிரபல பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தில்
தொடர்ந்து நடித்து வருகிறார். அதை பார்த்து தீவிர ரசிகர் ஒருவர் அதை
பயன்படுத்த துவங்கியுள்ளார். அதனால் அவருக்கு இப்போது கேன்சர் வந்துள்ளது.
டீ கடை நடத்திவந்த அவர் தற்போது பேசக்கூட முடியாமல் வீட்டில் உள்ளாராம். கேன்சர்
வர நீங்கள் தான் காரணம். இந்த விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துங்கள் என
கூறி 1000திற்கும் மேற்பட்ட போஸ்டர்கள் அடித்து ராஜஸ்தானின் பல இடங்களில்
ஒட்டப்பட்டுள்ளது.
இனிமேலாவது அஜய் தேவ்கன் திருந்துவாரா?