இதனால் தான் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை - காஜல் அகர்வால் விளக்கம்


பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் டில்லியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் பங்கேற்க நடிகை காஜல் அகர்வாலுக்கும் அழைப்பு வந்துள்ளது. ஆனால், அழைப்பிதழ் தாமதமாக வந்ததால் விழாவில் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவில்லையாம்.

இதுப்பற்றி டுவிட்டரில் காஜல் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கு.... பதவியேற்பு விழாவில் என்னை அழைத்தமைக்கு நன்றி. மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க அந்த விழாவில் பங்கேற்க நானும் ஆர்வமாய் இருந்தேன். 

ஆனால் எனக்கான அழைப்பிதழ் தாமதமாக கிடைக்கப்பெற்றதால் என்னால் குறித்த நேரத்திற்குள் டில்லி செல்ல முடியவில்லை. அதை நினைத்து மிகவும் வருந்தினேன். உங்கள் நல்லாட்சி சிறக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.