முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் ஒரு முன்னணி நடிகரை இயக்கவுள்ளார்.
அவர்
வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான்,
ஆம், அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக தமிழில் நடிக்க முயற்சி செய்து
வருகின்றார்.
தற்போது முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும்
படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரவுள்ளது, இதனால், தெலுங்கு
ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.
ஏற்கனவே, மகேஷ் பாபு வை வைத்து தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியான ஸ்பைடர் திரைப்படம் வெளியாகி டர்ர்ர் ஆனது. இப்போது, அல்லு அர்ஜுனா என டர்ர் ஆகித்தான் கிடக்கிறார்கள் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.



