Posts

Showing posts with the label Murugadoss

ஹோட்டலில் ஏமாந்த சுவாசிகா! யார் கூப்பிட்டாலும் போயிடுவியா? முருகதாஸ் குறி வைக்கப்பட்டது குறித்து வெடித்த பிரபலம்!

Image
தமிழ் சினிமா நடிகை சுவாசிகா சமீபத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்ற தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் தனது அம்மாவுடன் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துச் சென்று இயக்குநர் முருகதாஸை சந்திக்க சென்றதாகவும், ஆனால் அவர் அங்கு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். சேகுவேரா, சுவாசிகாவின் அறிக்கையை வரவேற்று, பெண்கள் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை பாராட்டினார். இருப்பினும், அவர் தனது அறிக்கையில் முருகதாஸ் பெயரை குறிப்பிட்டு பேசிய விதத்தை கேள்விக்கு உள்ளாக்கினார். “நீங்கள் தைரியமாக பேசுகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் யார் உங்களை அழைத்துச் சென்றாரோ அவரது பெயரை ஏன் சொல்லவில்லை?” கண்டிப்பாக உங்களுக்கு பரிட்சயமான நபர் அழைத்து தானே சென்றிருப்பீர்கள்? அல்லது யார் கூப்பிட்டாலும் போயிடுவியா? என்று காட்டமான கேள்வி எழுப்பினார். முக்கிய கேள்விகள்: சேகுவேரா மேலும் கூறியதாவது: “முருகதாஸ் பெயரை சொல்வதில் தயக்கம் இல்லை. ஆனால் அவரை அழைத்துச் சென்ற ...

மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படம் மதராஸி.. முருகதாஸை சீண்டிய சல்மான் கான்.. என்ன நடந்தது..?

Image
மும்பை: பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'சிக்கந்தர்' படம் பெக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியைத் தழுவியது. இயக்குநர் முருகதாஸ் அளித்த பேட்டியில், நடிகர் சல்மான் கானின் லேட் அரைவல் ஷூட்டிங் டைமிங்கே படத்தின் தரத்தை பாதித்ததாகக் கூறினார். "பகல் காட்சிகளை இரவில் இடம்பெயர்த்து படமாக்க வேண்டியிருந்தது. சல்மான் இரவு 8 மணிக்கு மட்டுமே செட்-க்கு வருவார்" என்று அவர் விமர்சித்தார். மேலும், குழந்தை நட்சத்திரங்களின் சோர்வு, உணர்ச்சிக் காட்சிகளின் தோல்வி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார். இதற்கு சமாதானமாக, 'பிக் பாஸ் 19' நிகழ்ச்சியின் ஹோஸ்ட் சல்மான் கான் பதிலடி கொடுத்தார். "சமீப படங்களில் எதுவுமே என்னை வருத்தப்பட வைக்கவில்லை. 'சிக்கந்தர்'யும் அப்படித்தான். கதை சிறப்பாக இருந்தது. நான் இரவு 9 மணிக்கு வருவேன் என்று இயக்குநர் சொன்னார், ஆனால் அப்போது என் விலா எலும்பு உடைந்திருந்தது" என்று விளக்கினார். ஆரம்பத்தில் சஜித் நதியவாழா இயக்கிய படமாக இருந்த 'சிக்கந்தர்', பின்னர் முருகதாஸ் கையில் வந்தது. சஜித் விட்டு விலகியதும், முருகதாஸ் 'மதராசி' என்ற படத்தை இ...

தளபதி65 - "நீங்க என்ன என்னை தூக்குறது - நானே போறேன்.." - சன் பிக்ஸர்சிடம் மாஸ் காட்டிய முருகதாஸ்..!

Image
'தளபதி 65' படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பின்னணி என்ன என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.    'துப்பாக்கி', 'கத்தி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணிபுரிய ஒப்பந்தமானார்கள்.    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இதன் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அப்போது திரைக்கதையின் இறுதி வடிவத்தைத் தயார் செய்துக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.    சில தினங்களுக்கு முன்பு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது கதை, திரைக்கதையின் வடிவம், வசனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முருகதாஸ் முழுமையாகச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட விஜய்க்கு பரமதிருப்தி.    ஆனால், விஜய் படம் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முழுமையாகக் கதையைக் கேட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் திருப்தி அளிக்கவில்லை.    அப்போது, குறிப்பிட்ட அரசியல் கட்ச...

அதெல்லாம் முடியவே முடியாது..! - ஸ்ட்ரிக்ட் காட்டிய முருகதாஸ்..!

Image
பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் இணையத் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார் வாணி போஜன். சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்துக் கவனம் பெற்றார் வாணி போஜன்.  இதற்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் இணையத் தொடரில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார்.  முருகதாஸின் உதவி இயக்குநர் இந்தத் தொடரை இயக்கவுள்ளார். இதற்கு முன்பு தனது சிஷ்யர்கள் இயக்கிய எங்கேயும் எப்போதும் (சரவணன்), ரங்கூன் (ராஜ்குமார் பெரியசாமி) ஆகிய படங்களையும் முருகதாஸ் தயாரித்துள்ளார்.  ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ராங்கி என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். கிட்ட தட்ட இந்த படத்தின் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இந்த படத்தை ஆன்லைனில் வெளியிட பிரபல OTT தளம் ஒன்று கேட்டுள்ளது. ஆனால், முருகதாஸ் முடியவே முடியாது படம் முதலில் த...

ஹை-டெக்காக உருவாகும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் - ஓ.கே சொன்ன விஜய் - பட்ஜெட் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Image
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்நிலையில், தளபதி 65 குறித்த தகவல்கள் இணையத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. அதில், இயக்குனர் சுதா கொங்கரா விஜய்யை இருக்கிறார் என்பது பரவலாக பேசப்பட்டது. ஆனால், மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைக்கிறார் எனவும் "கைதி" படத்தை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது என்ற தகவலும் வந்துள்ளது. இதில் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது ரசிகர்கள் மூக்கின் மேல் கை வைக்கும் வண்ணம் ஒரு தகவல் வந்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட் இந்த படம் பிரமாண்டபொருட்செலவில் தயாராகவுள்ளது. ஆம், 250 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள இந்த படம் ஹை-டெக்காக உருவாகவுள்ளது என்று கூறுகிறார்கள்.   முருகதாஸ் இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், இதற்க்கான கதையை விஜயிடம் ஏற்கனவே கூறி சம்மதமும் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள்.    துப்பாக்கி 2 ஆம், விஜய் நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர்...

இயக்குனர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..! - மாஸ் அப்டேட்..!

Image
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "தர்பார்" திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை விருந்தாக வெளியாகி ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போகும் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மகேஷ்பாபு-வை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் இயக்கியிருந்தார் முருகதாஸ் படம் மண்ணை கவ்வியது. அப்போதே, நடிகர் அல்லுஅர்ஜுனிடம் ஒரு கதையை கூறினார் முருகதாஸ். ஆனால், அவர் இயக்கியிருந்த ஸ்பைடர் திரைப்படம் தோல்வியடைதிருந்தாலும் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ் என்பதால் வேண்டாம் என மறுக்காமல் ஒரு ஹிட் கொடுத்துட்டு வாங்க, இதே கதையில் படம் பண்ணலாம் என்று கூறி அனுப்பினார் அல்லு அர்ஜுன் என்ற தகவல்கள் வெளியாகின.  அதனை தொடர்ந்து சர்கார் என்ற படத்தை எடுத்தார் முருகதாஸ். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆளும் கட்சியின் எதிர்ப்பு காரணமாக படம் ஒருவழியாக கரையை சேர்ந்தது. இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.  ஆனால், தற்போது இவர் இயக்கத்தில் வெளியான தர்பார் படம் ஹிட் அடிக்க அல்லு அர்ஜுனை இ...

முருகதாஸிற்கு இருக்குற பிரச்சனை பத்தாது என எஸ்.பி.பி வேற..!

Image
இயக்குனர் முருகதாஸ்நடிகர் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பிரபல பாடகர் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பேட்ட படத்தை போல இரண்டு வரிகளை மட்டும் எஸ்.பி.பிக்கு கொடுக்காமல் முழு பாடலையும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.  ஏற்கனவே, தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியாகி படககுழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.  படக்குழுவில் உள்ள யாரோ ஒருவர் தான் இந்த வேலைகளை செய்கிறார் என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார் முருகதாஸ். இதனால், படப்பிடிப்பு தளத்தில் கடுமையான கெடுபிடி என்று நம் தளத்திலேயே கூறியிருந்தோம். ஆனால், எஸ்.பி.பி செய்துள்ள ஒரு வேலை தான் முருகதாஸின் டென்ஷனை அதிகமாகியுள்ளது.  ஆம், தர்பார் படத்தில் பாடியது குறித்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பி. கூறியதாவது, அருமையான சிச்சுவேஷன். ரஜினி சார் மும்பையில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவருக்காக பாராட்டு விழா நடத்துகிறார்கள். கடமையை செ...

மறுபடியும் மொதல்ல இருந்தா..! - முருகதாஸ் அடுத்த படத்தின் ஹீரோ..! - டர்ர் ஆகும் ரசிகர்கள்..!

Image
முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் ஒரு முன்னணி நடிகரை இயக்கவுள்ளார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான், ஆம், அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக தமிழில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரவுள்ளது, இதனால், தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். ஏற்கனவே, மகேஷ் பாபு வை வைத்து தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியான ஸ்பைடர் திரைப்படம் வெளியாகி டர்ர்ர் ஆனது. இப்போது, அல்லு அர்ஜுனா என டர்ர்  ஆகித்தான் கிடக்கிறார்கள் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.

தர்பார் படத்தில் நடிக்க ரஜினியின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..? - கிறுகிறுன்னு வருதே..!

Image
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் அடுத்து தர்பார் படம் தயாராகி வருகின்றது. இப்படத்தை முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகின்றார், இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் எவ்வளவு என்று பார்த்தால் ரூ 100 கோடியாம், இதை ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஹிந்தியில் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் கூட சம்பளமாக இத்தனை கோடி பெற்றது இல்லையாம், லாபத்தில் வரும் ஷேரில் தான் சம்பளத்தை பெறுவார்கள்.