ரஜினி, அஜித், விஜய் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்க இது தான் காரணம்..! - போட்டு உடைத்த திரைப்பிரபலம்..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி-கமல், அஜித்-விஜய். இவர்கள் படங்கள் செய்யும் சாதனைகள் ஏராளம்.

விஜய் நடிப்பில் தளபதி 63, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, ரஜினி நடிப்பில் தர்பார் என அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இவர்களை பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் மைம் கோபி. அதில் அவர், இந்த துறையில் என்னால் பல கலைஞர்களை இன்னும் உருவாக்க முடியும். மெட்ராஸ், கதக்களி போன்ற படங்கள் என்னை மக்களுக்கு அறிமுயப்படுத்தியுள்ளது.

கபாலியில் ரஜினியுடன் நடித்தது என்னால் மறக்கவே முடியாது. எங்கோ ஒரு இடத்தில் நாம் செய்யும் வேலையை நேசித்தால் தான் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தால் அந்தந்த துறையில் நல்ல இடத்தில் இருக்கிறோம். நானும் அப்படித்தான். 

ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் தொடர்ந்து இன்னும் ஜெயித்துக்கொண்டிருக்கும் காரணம் இதுதான் என பேசியுள்ளார்.
Previous Post Next Post