அடங்க மறு, அயோக்யா, இமைக்கா நொடிகள் என தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக பார்த்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஷி கண்ணா, அடுத்ததாக, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிங்கத் தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடனும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஷி கண்ணாவிடம் உங்களுக்கு தமிழில் எந்த நடிகரை பிடிக்கும் அஜித்தா..? விஜய்யா..? என்ற கேள்விக்கு, அவர் கூறியிருப்பதாவது:
சின்ன வயசில் எனக்கு நடிகர் ஷாருக்கான் மீது தான் அதிக ஈர்ப்பு இருந்தது. தற்போது, அது அப்படியே நடிகர் அஜித் மீது மாறியிருக்கிறது. அவரது சிரிப்பு ஒன்றே போதும்; பிரமாதம். அவரோடு இணைந்து நடிக்கும்போது, அந்த சிரிப்பை நான், நேரிலேயே கண்டு ரசிப்பேன்.
அவரது புன்முறுவலை நான் சமீபத்தில் அவர் நடித்து வெளியான விஸ்வாசம் படத்தில் பார்த்தேன். இவ்வாறு நடிகை ராஷி கண்ணா கூறியிருக்கிறார்.
Tags
Rashi Khanna