நடிகர் விஜய்யின் தெறி, ‘மெர்சல்’ ஆகிய இருப்படங்களை அடுத்து மீண்டும் இயக்குநர் அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆகவே இப்படம் குறித்த செய்திகள் ‘தளபதி63’ என்றே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
‘சர்கார்’ வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து அவரது ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டு இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த படத்திற்கு மொத்தம் மூன்று தலைப்புகளை தேர்வு செய்துள்ளது படக்குழு. ஏற்கனவே வெளியான CM மற்றும் பிகிலு உட்பட மூன்றாவதாக புதிய தலைப்பு ஒன்றை கொடுத்துள்ளது படக்குழு.
இதில், விஜய்க்கு பிடித்த தலைப்பு பிகிலு என்பது தானாம். படத்தின் தலைப்பு என்ன என்பதை இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.