விஜய் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கும் விஜய் 63 படத்தின்
ஷூட்டிங் அட்லீ இயக்கத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் படத்திற்காக
போடப்பட்ட பிரம்மாண்ட செட் புகைப்படங்கள் வெளியாகின.
இந்த ஆண்டின்
தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள்
காத்திருக்கிறார்கள். வரும் ஜூன் 22 ம் நாள் விஜய்யின் பிறந்தநாள்
கொண்டாடப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் தயாராகிறார்கள்.
இந்நிலையில்
தற்போது விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார்
எனவும், அப்பா விஜய்க்கான காட்சிகள் தற்போது சென்னை சென்னையில்
எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் அப்பா, மகன்கள் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்துஅசத்தியிருந்தார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம், மெர்சல் பட கனெக்ஷனை தளபதி 63-ல் கொண்டு வந்துள்ளார் அட்லி.



