அள்ள அள்ள பணம் - பங்கு சந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 7


வணக்கம் வணக்கம் வணக்கம்...! அள்ள அள்ள பணம்..! என்ற தலைப்பில் பங்கு சந்தையில் பணம் அள்ளுவது எப்படி என ஆறு பகுதிகளை நாம் பார்த்து விட்டோம். ஒரு வேளை, அவற்றை படிக்காமல் நேரடியாக இங்கே வந்திருந்தால் தயவு செய்து கீழே உள்ள லிங்க்குகளை பயன்படுத்தி அந்த இரண்டு பகுதிகளையும் படித்து விட்டு வாருங்கள். அப்போது தான் இந்த பகுதியை புரிந்து கொள்ள முடியும். 

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6

சரி வாங்க இன்றைய பகுதிக்குள் செல்லலாம். கடந்த பகுதியில் Technical Analysis என்றால் என்ன என்றும், Candle Stick Chart மற்றும் அதிலுள்ள கேண்டில்களை எப்படி புரிந்து கொள்வது என்றும் பார்த்தோம்.

நீங்கள் நினைக்கலாம், என்னடா இது வழ வழ கொழ கொழவென பதிவுகள் இழுத்துக்கொண்டே போகின்றது. ரத்தினச்சுருக்கமாக சொன்னால் எளிமையாக இருக்குமே என்று..? ஆனால், ரத்தின சுருக்கமாக சொல்வதற்கு இது கதையல்ல, நிஜம். பணம். யாருடைய பணம்.. நம்முடைய பணம். நம்முடைய பணம் என்றால் நம்முடைய உழைப்பு.

ஆகவே, நம்முடைய உழைப்பை வைத்து பங்கு சந்தையில் முதலீடோ அல்லது ட்ரேடிங்கோ செய்து லாபம் பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

மீண்டும் சொல்கிறேன். பங்கு சந்தை ஆசை காட்டி மோசம் செய்யும் தன்மை கொண்டது. ஆசையால் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து போண்டியாகி ஒரு டீ வாங்க கூட காசு இல்லாமல் பிச்சைகாரர்கள் ஆனவர்கள் கதை ஏராளம். அதனால், பங்கு சந்தையை அவ்வளவு எளிதாக கணக்கு போட்டு விட வேண்டாம்.

அதே நேரத்தில், 1000 ரூபாயை வைத்துக்கொண்டு லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆனவர்கள் கதையும் உண்டு. பங்கு சந்தையில் முதலில் நுழையும் போது பணத்தை போட்டு போண்டியாகி நின்றவர்களை மனதில் வைத்துக்கொண்டு தான் இறங்க வேண்டும்.

அனுபவம் வாய்ந்த பங்கு சந்தை வல்லுனர்களே சில சமயம் நஷ்டத்தை சந்திப்பது உண்டு. அவர்களுக்கே அப்படியென்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்ற விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டே இருங்கள்.

நான் சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும். கார் வாங்க வேண்டும். வீடு வாங்க வேண்டும். இது எல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும் என பங்கு சந்தைக்கு பணத்தை தூக்கி கொண்டு வந்தால். இருப்பதை பிடுங்கி கொண்டு கொஞ்சம் ஓரமா போய் நில்லு என்று பங்குச்சந்தை நம்மை தூக்கி எறிந்து விடும் உஷார்..!

சரி வாங்க இன்றையவகுப்பிற்க்குள் செல்வோம்.

பங்கின் விலை ஏறப்போகிறதா..? அல்லது இறங்கப்போகிறதா..? என்று எப்படி கணிப்பது என்பதை இப்போது பாப்போம். கேண்டில் ஸ்டிக்குகளை வைத்து பங்கின் விலை ஏறப்போகின்றதா..? அல்லது இறங்கப்போகின்றதா..? என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

அதனுடன், இன்னொரு விபரத்தையும் நாம் பார்க்கக் வேண்டும். அது தான், வால்யூம் ஆக்ஷன் மற்றும் ப்ரைஸ் ஆக்ஷன் ( Volume Action and Price Action).

வால்யூம் ஆக்ஷன் என்பது, ஒரு பங்கினை அந்த நாளில் எத்தனை பேர் வாங்குகிறார்கள். எத்தனை பேர் விற்கிறார்கள் என்பது தான். இந்த விபரம் நொடிக்கு நொடி உங்களுடைய ட்ரேடிங் பிளாட்பார்மில் லைவாக பார்க்கலாம்.

உதாரணத்திற்கு, இப்போது June 24 , 2019 நேரம் காலை 11:29 மணிக்கு Zee Entertainment நிறுவனத்தின் கேண்டில் ஸ்டிக் ஷார்ட் மற்றும் வால்யூம் ஆக்ஷன் விபரம் என்னுடைய ட்ரேடிங் ப்ளாட் பார்மில் இருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்துள்ளேன் பாருங்க.


இதில், Total Buy Qty மற்றும் Total Sell Qty என இரண்டு வட்டங்கள் வரைந்துள்ளேன் அல்லவா, அதனை பாருங்கள். அது தான் வால்யூம் ஆக்ஷன். இதன் மூலம் கிட்ட தட்ட 70 முதல் 80 சதவிகிதம் சந்தையின் போக்கை கணிக்க முடியும்.

மேலே உள்ள ஷார்ட்டில், கவனித்தால் புரியும் அந்த பங்கினை வாங்குபவர்களின் எண்ணிக்கை 429026 ஆனால், விற்பவர்களின் எண்ணிக்கை அதை விட கிட்ட தட்ட 50 ஆயிரம் குறைவாக  389345 உள்ளது.

இப்போது என்ன நடக்கும், வாங்குபவர்கள் அதிகம் இருகிறார்கள், ஆனால, விற்ப்பவர்கள் குறைவாக இருகிறார்கள். ஆக, அந்த பங்கின் டிமான்ட் அதிகமாக இருக்கின்றது. அதனால், இங்கே விற்பவர்கள் சொல்வது தான் விலை. எனவே, மார்க்கெட்-டின் போக்கு மேல் நோக்கி இருக்கும். அதாவது அந்த பங்கின் விலை ஏறும்.

அதே தான் அந்த கேண்டில் ஸ்டிக் ஷார்ட்டில் நடந்துள்ளது. 347.50-ல் இருந்து ஒரு பங்கின் விலை டிமாண்டு காரணமாக 349.50-க்கு உயர்ந்துள்ளது. இந்த வால்யூம் ஆக்ஷன் அடுத்த நொடியோ அல்லது பத்து நிமிடம் கழித்தோ அப்படியே ரிவர்ஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது. அதனால், வால்யூம் ஆக்ஷன் மீது எப்போது ஒரு கண்ணை வைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இங்கே நான் என்ன தான் சொன்னாலும் புரிந்த மாதிரி இருக்குமே தவிர நீங்கள் மார்கெட்டுக்குள் இருந்தால் ஒழிய முழுமையாக புரிந்து கொள்வது கடினம்.

அடுத்த பகுதியில் வேறு எந்தெந்த வழிகளில் மார்கெட்டின் போக்கை கணிக்கலாம் என்று பாப்போம்.

நண்பர்கள் சிலர் ஷேர் மார்கெட்டில் ட்ரேடிங் செய்ய எது சிறந்த ப்ரோகரேஜ் நிறுவனம் என்று கேட்டுக்கொண்டே இருகிறார்கள்.! அவர்களுக்கான பதில் இதோ,

மார்க்கெட்டில் எளிமையாக ட்ரேடிங் செய்ய எது சிறந்த ப்ளாட்பார்ம் என்று என்னை கேட்டால் Zerodha என்ற நிறுவனத்தை சொல்வேன். காரணம், பயன் படுத்துவது மிகவும் எளிது அதே நேரம்அவர்கள் நம்முடையதாய்மொழியான தமிழிலேயே நமக்குவிபரங்களை கூறுவார்கள். உங்களுக்கு எழும் சந்தேகங்களை நீங்கள் நம்முடைய தாய் மொழியிலேயே கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

ட்ரேடிங் அக்கவுண்டை நீங்கள் ஒப்பன் செய்ய விரும்பினால் இந்த லிங்க் -கை www.zerodha.com க்ளிக் செய்து இணைந்து கொள்ளலாம். ஒரு முறை உங்களுடைய விபரங்களை கொடுத்துவிட்டால் போதும் அவர்களே உங்களுடைய தாய்மொழியில் வழிமுறைகளை சொல்லி அக்கவுன்ட-டை ஓப்பன் செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களுக்கு உதவி செய்வார்கள்.

அடுத்தடுத்த பதிவுகளை தொடர்ந்து பார்க்கலாம். இனி தினமும் பதிவுகள் வெளியாகி கொண்டே இருக்கும்.படித்து பயன் பெறுங்கள்.

தொடர்ந்து வரும், பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/tamizhakamsmt/ ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, (https://t.me/tamizhakamsmt)  என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

உங்களிடம் டெலிகிராம் ஆப் இல்லையென்றால் தயவு செய்து இன்ஸ்டால் செய்து நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதில், அனைத்து பதிவுகளின் லிங்குகள். அவ்வபோது செய்யப்படும் அப்டேட்டுகள் உங்களுக்கு தவறாமல் கிடைக்கும்.