சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் தான் அடிக்கடி புதுப் புது போட்டோஷுட்களை எடுத்து அவற்றை மீடியாக்களுக்குக் கொடுத்து அவர்கள் புகைப்படங்களை பப்ளிஷ் ஆக வைப்பார்கள். அப்போதுதான் அந்த புகைப்படங்களைப் பார்க்கும் திரையுலகினல் அவர்கள் படங்களில் ஏதாவது பொருத்தமான வாய்ப்பு இருந்தால் அந்த நடிகைகளுக்கு வழங்குவார்கள்.
இந்த சமூக வலைத்தள யுகத்தில் நடிகைகளுக்கு அப்படி புகைப்படங்களை மீடியாக்களுக்கு அனுப்ப வேண்டிய வேலை குறைந்துவிட்டது. அவர்களது சமூக வலைத்தளங்களிலேயே அவர்களது புகைப்படங்களைப் பதிவேற்றிவிடுகிறார்கள்.
முன்னணியில் இருக்கும் நடிகைகள் கூட அடிக்கடி அப்படி புகைப்படங்களை வெளியிடுவது இந்தக் காலத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. சாதாரணமான புகைப்படங்களைப் பதிவேற்றினால் கூடப் பரவாயில்லை. ஆனால், கிளாமரான புகைப்படங்களை அவர்கள் பதிவேற்றுவது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.
'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா' ஆகிய படங்களில் நடித்தவரும், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக 'சங்கத் தமிழன்' படத்தில் நடிப்பவருமான ராஷி கண்ணா நேற்று அப்படி சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேலும், கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்கவும்தயாராக இருக்கிறார் அம்மணி.






