தலைவர் நடிகரை எப்படியாவது முடக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதாம்
ஆளும் தரப்பு. தேர்தலில் போட்டி, அவ்வப்போது அரசுக்கு எதிராக பேட்டி என
ஏகத்துக்கு எதிர்ப்பை சம்பாதித்து விட்டாராம் தலைவர்.
அதனால் தான் அவர்
படத்தை ஒரு நாள் தாமதமாக்கி நஷ்டத்தையும் ஏற்படுத்தினாங்களாம். ஒரு
சங்கத்தில் டம்மியாக்கியது போன்று இன்னொரு சங்கத்திலிருந்தும் விரட்ட
தயாராகிறார்களாம்.
இதற்காக மாஜி தலைவர் மற்றும் அவரது மனைவியை களமிறக்க
தயாராகிறார்கள். "சண்டை வேண்டாம் சமாதானமாக போகலாம்" என நடிகர், வெள்ளை
கொடி காட்டி வருகிறாராம்.


