சினிமாவில் ஒரு படம் நடித்து அந்த படம் ஹிட்டும் ஆகிவிட்டால் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களை மறக்க மாட்டார்கள்.
அந்த வகையில் பல நடிகர், நடிகைகள் ஒன்று அல்லது இரண்டு ஹிட் படங்களில் மட்டும் நடித்துவிட்டு பிறகு காணமால் போய்விடுவார்கள். காரணம், சினிமாவின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் சில சொல்ல முடியாத அசிங்கங்கள் தான்.
சிலர்,அப்படியான பிரச்சனைகளில் சிக்கி வெளியே சென்று விடுவார்கள். இன்னும் சிலர் தங்களுடைய சொந்த குடும்ப சூழல் காரணமாக ஒதுங்கி விடுவார்கள். அந்த வகையில், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட மின்சாரகண்ணா பட நடிகை மோனிகா. இந்த படம் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை என்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்றளவும் தொலைகாட்சிகளில் இந்த படத்தை ஒளிபரப்பு செய்தால் கணிசமான TRP கிடைகின்றது. உன் பேர் சொல்ல ஆசைதான் என்ற பாடலின் மூலம் ரசிகர்களை சென்றடைந்தார் மோனிகா. தற்போது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் சினிமா சார்ந்த விழாக்களில் தலைகாட்ட தொடங்கியுள்ளார் அம்மணி. அவருடைய தற்போதைய புகைப்படம் இதோ,