இப்போது நடந்து அரும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்த தோல்விகளால் விமர்சனத்துக்கு ஆளாகி வந்த பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு வெற்றிகளுடன் அரையிறுதிக்கான போட்டியில் நுழையும் வாய்பை பெரும் சூழலில் உள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் நுழைவதை இந்திய அணி நிச்சயம் விரும்பாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் வந்து விட கூடாது. அதற்காக வேண்டுமென்றே வங்க தேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியடைந்து அந்த அணிகளின் ரன் ரேட்டை அதிகப்படுத்தும்.
இந்தியா வேண்டுமென்றே அவ்வாறு விளையாடித் தோற்றால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் போய்விடும். பாசித் அலியின் இந்தக் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏம்பா பாசித் அலி,,இவ்ளோ வெவரமா பேசுறியே..கப் ஜெயிக்கணும்-னு ஆசையிருந்தா ஆரம்பத்துல இருந்தே நல்லா ஆட வேண்டியது தானே.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.