விஜய் டிவியில் காமெடியன்களாக இருப்பவர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் சமீபத்தில் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மேடையில் திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து, தேசியகட்சி பாஜக மற்றும் அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழசை சௌந்தர்ராஜனை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுபற்றி பலரும் நிஷாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இது பற்றி மன்னிப்பு கேட்டு அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்."நான் பேசியது தவறுதான். இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க. திரும்ப இப்படி நடக்க வாய்ப்பே இல்லை" என கூறி நிஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், பா.ஜ.க இப்போது தான் ஒரு அரசியல் கட்சியாக செயல்பட ஆரம்பித்துள்ளது எனவும் கருத்து சொல்ல உரிமை கொடுத்தால் யாரும் கருத்துகளை சொல்வதில்லை யார் அந்த உரிமையை கொடுக்கிறார்களோ அவர்களை கலாய்ப்பது, அவர்களுடைய தோற்றத்தை கலாய்ப்பது போன்ற வேலையை தான் செய்து வருகிறார்கள்.
திமுகவுடன் சேர்ந்து வீணாய்ப்போன காமெடி ஜாம்பவான் வடிவேலு-வை ஒரு நிமிடம் நினைத்து பார்த்திருந்தால் நிஷா இப்படியெல்லாம் பேசியிருப்பாரா..? தின்று கொளுத்த நண்டு வலையில் தங்காது என்பதற்கு உவமை ஆகிவிட்டார் நிஷா, என்று ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.



