நடிகர் கிரேஸி மோகன் திடீர் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி..!


நடிகர் கிரேஸி மோகனை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கொடி கட்டி பறந்தவர். 
கமல்ஹாசன் அவர்களின் பஞ்ச தந்திரம் படத்தை ரசிக்காதவர்கள் யாரும் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் கிரேஸி மோகன் எழுதிய வசனங்கள். கவுண்டர் வசனம்கள், மழுப்பல் வசனங்கள் எல்லாம் இவருக்கு கை வந்த கலை.
இந்த படம் மட்டுமில்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம், கமல் ஹாசனின் அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா MBBS என பல படங்களில் வசனங்கள் மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார். 
இவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பிரபலங்கள் மட்டுமில்லாது ரசிகர்களையும் பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.