Posts

Showing posts with the label Crazy Mohan

கிரேஸி மோகன் குறித்து போட்ட பதிவிற்கு மன்னிப்பு கேட்ட நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா

Image
நேற்று காலை பிரபல நடிகை கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்தினார். பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வருத்தம் தெரிவித்து பதிவுகளை பகிர்ந்தனர்.  நடிகர் தனுஷ்-ன் தந்தை கஸ்தூரி ராஜாவும் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், கிரேஸி மோகன் என்பதற்கு பதிலாக லூஸ் மோகன் என்று தவறுதலாக பதிவு செய்துவிட்டார்.  இதனால் ரசிகர்கள் அவரை திட்ட தொடங்கிவிட்டனர். ஒரு வருத்தமான பதிவை கூட இப்படித்தான் போடுவீர்களா..? என விளாச தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சற்று முன்பு " நேற்று தவறுதலாக  லூஸ் மோகன் என்று பதிவி ட்டுவிட்டேன் எனவும்  தவறை சுட்டிக்காட்டி உணர்த்திய  சகோதரருக்கு பணிவான நன்றி" என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கஸ்தூரி ராஜா. 

ஒரே நாளில் இரண்டு நடிகர்கள் மரணம் - வைரலாகும் கண்கலங்க வைக்கும் புகைப்படம்..!

Image
நேற்று காலை விடிந்ததும் இணையத்தில் நுழைந்த பலருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அது, பிரபல தென்னிந்திய நடிகர் கிரிஷ் கர்னாட்டின் மறைவு செய்தி. நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவரது மறைவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அந்த அதிர்ச்சி தொடங்கிய அடுத்த சில மணி நேரங்களில் வந்தது நடிகர், வசனகர்த்தா கிரேஸி மோகனின் மறைவு செய்தி. என்ன நடக்கின்றது என்று ரசிகர்கள் புரிந்து கொள்வதற்கே சில மணி நேரங்கள ஆனது. அடுத்தடுத்து வந்த பிரபலங்களில் மறைவு செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஆனார்கள்.  இந்நிலையில், ரட்சகன் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் நடிகர் கிரிஷ் கர்னாட் இருக்க, நடிகர் கிரேஸி மோகனின் பெயர் வருவது போன்ற ஒரு ஸ்நாப் புகைப்படம் இணையாத்தில் வைரலாகி ரசியக்ர்களின் கண்களை குளமாக்கின. இதோ அந்த புகைப்படம், 

காலை 10 மணிக்கு நன்றாக இருந்த கிரேஸி மோகன் இறந்தது எப்படி..? - வைரமுத்து கூறிய அதிர்ச்சி தகவல்

Image
நடிப்பு, வசனம், மேடை நாடகம் என ஆல்ரவுண்டராக வளம் வந்து கொண்டிருந்தவர் கிரேஸி மோகன். இவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.  இவரது இறுதிசடங்கில் கலந்துகொண்ட வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய விஷயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.  அதாவது, இன்று காலை 10 மணிக்கு குடும்பத்தினருடன் நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருந்த அவருக்கு சரியாக 10:30 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள்.  மரணம் கூட அவருக்கு நிம்மதியாக வந்திருக்கின்றது என்றும் கிரேஸி மோகன் மரணத்தால் ஆசிர்வாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார் வைரமுத்து.

நடிகர் கிரேஸி மோகன் திடீர் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Image
நடிகர் கிரேஸி மோகனை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கொடி கட்டி பறந்தவர்.  கமல்ஹாசன் அவர்களின் பஞ்ச தந்திரம் படத்தை ரசிக்காதவர்கள் யாரும் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் கிரேஸி மோகன் எழுதிய வசனங்கள். கவுண்டர் வசனம்கள், மழுப்பல் வசனங்கள் எல்லாம் இவருக்கு கை வந்த கலை. இந்த படம் மட்டுமில்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம், கமல் ஹாசனின் அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா MBBS என பல படங்களில் வசனங்கள் மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார்.  இவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பிரபலங்கள் மட்டுமில்லாது ரசிகர்களையும் பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.