சிலந்தி மோனிகா என்ன ஆனார்..? இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா..?


 நடிகை மோனிகா சில வருடங்களுக்கு முன்பு முஸ்லீம் மதத்துக்கு மாறியதோடு தனது பெயரையும் ரஹீமா என்று மாற்றிக் கொண்டார். அதனை தொடர்ந்து இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாலிக் என்ற ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். 

சிலந்தி படத்தில் கவர்ச்சியில் திணறிடித்தவர் பர்தா அணிந்து பிரஸ்மீட்டிற்கு வந்தது அதிர்ச்சியாகதான் இருந்தது. மோனிகா கடைசியாக நடித்திருக்கும் படம், நதிகள் நனைவதில்லை. பெயர்தான் நனையவில்லையே தவிர படத்தில் ரசிகர்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்கு மோனிகாவை நனையவிட்டிருக்கிறார் இயக்குனர் பி.சி.அன்பழகன். 

படத்தின் ஸ்டில்களைப் பார்த்தாலே பத்து சிலந்திக்கு சமம் என்று சத்தியம் செய்யலாம், அப்படியொரு கவர்ச்சி மழை. நதிகள் நனைவதில்லையில் மோனிகாவின் குளியல் காட்சியைப் பார்த்தால், எப்படியும் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை. 

கடைசி படம் அதனால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவோம் என காட்டியது போலவே இருக்கும். அதனால், அவர் நிஜமாகவே சினிமாவுக்கு தலைமுழுகிவிட்டதை தெரிந்து கொள்ளலாம்.இப்போது, தான் உண்டு தன்னுடைய குடும்பம் உண்டு என்று இருக்கும் அவரை படத்தில் நடிக்க யாரவது அழைத்தால் சிம்பிளாக சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என ஒரே வார்த்தையில் கூறி விடுகிறாராம்.