நேற்று காலை பிரபல நடிகை கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்தினார். பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வருத்தம் தெரிவித்து பதிவுகளை பகிர்ந்தனர்.
நடிகர் தனுஷ்-ன் தந்தை கஸ்தூரி ராஜாவும் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், கிரேஸி மோகன் என்பதற்கு பதிலாக லூஸ் மோகன் என்று தவறுதலாக பதிவு செய்துவிட்டார்.
இதனால் ரசிகர்கள் அவரை திட்ட தொடங்கிவிட்டனர். ஒரு வருத்தமான பதிவை கூட இப்படித்தான் போடுவீர்களா..? என விளாச தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சற்று முன்பு "நேற்று தவறுதலாக லூஸ் மோகன் என்று பதிவிட்டுவிட்டேன் எனவும் தவறை சுட்டிக்காட்டி உணர்த்திய சகோதரருக்கு பணிவான நன்றி" என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கஸ்தூரி ராஜா.



