நேற்று காலை விடிந்ததும் இணையத்தில் நுழைந்த பலருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அது, பிரபல தென்னிந்திய நடிகர் கிரிஷ் கர்னாட்டின் மறைவு செய்தி. நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவரது மறைவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த அதிர்ச்சி தொடங்கிய அடுத்த சில மணி நேரங்களில் வந்தது நடிகர், வசனகர்த்தா கிரேஸி மோகனின் மறைவு செய்தி. என்ன நடக்கின்றது என்று ரசிகர்கள் புரிந்து கொள்வதற்கே சில மணி நேரங்கள ஆனது. அடுத்தடுத்து வந்த பிரபலங்களில் மறைவு செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஆனார்கள்.
இந்நிலையில், ரட்சகன் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் நடிகர் கிரிஷ் கர்னாட் இருக்க, நடிகர் கிரேஸி மோகனின் பெயர் வருவது போன்ற ஒரு ஸ்நாப் புகைப்படம் இணையாத்தில் வைரலாகி ரசியக்ர்களின் கண்களை குளமாக்கின. இதோ அந்த புகைப்படம்,