நடிகர் சந்தானம் தமிழ்சினிமாவில் மிகப்பெரும் காமெடியான வலம் வந்தார். இவர் நடிக்கும் படங்கள் இவரது நகைசுவைக்காகவே ஓடி தயாரிப்பளர்களை காப்பாற்றின.
தற்போது, ஹீரோவாக மாறிவிட்ட இவர் காமெடி வாய்ப்புகளை அறவே ஒதுக்கிவிடுகிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நக்கல் மன்னன் கவுண்டமணியை ஒரு சில காட்சிகளில் நடிக்க வைக்க திட்டமிட்ட படக்குழு அவரை படத்தில் நடிக்குமாறு அணுகியுள்ளது.
ஆனால், கவுண்டமணியோ கதையையும் அவருடைய கதாபாத்திரத்தையும் சொல்லும் முன்பே ", படம் முழுவதும் நான் வருகிறேன் தானே,
அப்போ கண்டிப்பாக நடிக்கிறேன்" என்றுகூறியுள்ளார். ஆனால், கவுண்டமணிக்கு சிறு வேடம் தான் என்பதால் படக்குழு மேற்கொண்டு எதுவும் பேசமால் திரும்பியுள்ளது.


