தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். தற்போது, தளபதி 63படத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
கால் பந்தாட்ட விளையாட்டை கருவாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய் பிறந்தநாள் கொண்டாடத்தின் ஒரு பகுதியான காமன் Dp-யை நேற்று இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.
பெரும்பாலான விஜய் ரசிகர்கள் தங்களது Dp-யில் இந்த புகைப்படத்தை வைத்துவிட்டனர்.
இந்நிலையில், இந்த புகைப்படத்தின் டிசைன் காப்பி அடிக்கப்பட்டது என்று இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது.
கதையை காப்பியடிப்பது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காப்பியடிப்பதை பார்த்திருக்கிறோம். இப்போது, காமன் Dp-யை கூட காப்பி அடித்து தான் உருவாக்க வேண்டுமா என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனாலும், இந்த Dp நன்றாக இருக்கின்றது என பலரும் தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ,
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.