10 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்தும் அவருடன் நடிக்க மறுத்த நயன்தாரா..!


தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

இவர் தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக 'லவ் ஆக்சன் டிராமா' படத்தில்  நடித்துள்ளார். இப்படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடித்துள்ளார்.


மேலும், விஜயுடன் பிகில், ரஜினியுடன் தர்பார் என இப்படி முன்னணி ஹீரோக்கள் நயன்தாரா தங்கள் படங்களில் நடிப்பதை கௌரவமாகவே நினைத்து வருகிறார்கள். இந்த நிலையில் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல துணிக்கடை அதிபர் நயன்தாராவை தனது ஜோடியாக நடிக்க அணுகியுள்ளாராம். சென்னையின் பிரபல துணிக்கடை அதிபரான அவர் தானே விளம்பரங்களில் தோன்றி அதிர்ச்சி தந்தார். 


பின் தமன்னா, ஹன்ஷிகா போன்ற ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக விளம்பர படங்களில் நடிக்க வைத்தார். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுக்க உத்தேசித்திருக்கும் அவர் தனக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயன்று வருகிறாராம். இதைக்கேட்டு அதிர்ந்த நயன்தாரா அதிர்ந்தியடைந்தாராம். 

இவருடன் நடித்தால் தனது பெயரும், மார்க்கெட்டும் போய்விடும் என்பதால் நோ சொல்லிவிட்டாராம். ஆனால் ஜோடி சேர்ந்தால் நயன்தாரா என்ற முடிவில் இருக்கும் நகைக்கடை அதிபர் நயன்தாராவுக்கு சம்பளமாகரூ.10 கோடி தருகிறோம் எனக் கூறி பேசி வருகிறாராம். இன்னும் நயன்தாரா ஒத்துக்கொள்ளவில்லையாம். .

துணிக்கடை அதிபர் நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்டவர். நயன்தாராவை நடிக்க வைத்து விடுவார் எனச் சொல்கிறது கோடம்பாக்கத்து பட்சி. இதற்காக சம்பளமாக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக கூறினாராம். ஆனால், நயனோ பணத்தை பார்க்காமல், அந்த தொழிலதிபருடன் நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்று நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post