அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமாக மாறியவர் விஜய் தேவரகொண்டா. ரவுடி என்ற டேக்கில் அவரை ரசிகர்கள் அதிகம் பின்பற்றி வருகிறார்கள். அவருக்கு பெண் ரசிகைகளும் அதிகம்.
அடுத்ததாக அவரின் நடிப்பில் டியர் காம்ரேட் படம் வரும் ஜூலை 26 ல் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து பைக் ரேஸ் வீரராக அவர் ஹீரோ என்ற படத்தில் நடித்து வந்தார்.
இதில் அவருக்கு ஜோடியாக ஷாலினின் பாண்டே, மாலினி மோஹனன் ஆகியோர் நடித்து வந்தனர். இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு ரூ 15 கோடி செலவில் எடுக்கப்பட்டது.
ஆனால் படத்தின் போக்கு சரியாக அமையாததாலும், இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை படைப்பில் திருப்தி இல்லாத காரணத்தால் படத்தில் மேற்கொண்டு பணத்தை போட்டால் பாண்டியாக வேண்டியது தான் என முடிவு செய்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை ட்ராப் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
பைக் ரேஸ் வீரராக விஜய் தேவரகொண்டா-வை பார்க்க எதிர்பார்போடு இருந்த ரசிகர்கள் இதனால் எமாற்றமடைந்துள்ளன்ர்.



