தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருப்பவர்களின் நிஜமான முகங்கள் இப்போது தான் தெரிய வருகிறது.
அதே போல, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 சீசன் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் நடிகை ஹேமா.
இவர் அண்மையில் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், பிக்பாஸில் உள்ள பெண் போட்டியாளர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா..? என்ற பரிசோதனை நடந்ததாக கூறி தெலுங்கு மக்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதனை கேட்ட பலருக்கும் பிக்பாஸ் வீட்டில் சில மோசமான விஷயங்கள் நடக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.