தல 60 படத்தின் இயக்குனர் மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி - அதிகாரபூர்வ அறிவிப்பு..!


இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" படத்தில் நடிகர் தல அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். 

இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்க யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.


படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், அஜித் நடிக்கும் 60-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது பட பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும்” என்று கூறியுள்ளார். இது முற்றிலும் புதிய ஸ்கிரிப்ட். அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--