7 கோடியில் கேரவேன் வாங்கிய அல்லு அர்ஜுன் - அபராதம் விதித்த போலீஸ் - என்ன காரணம்..?


தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், பல கோடி மதிப்புள்ள கேரவன் ஒன்றை வாங்கி அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிள் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் உள் மற்றும் வெளி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சுமார் பல கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு பால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லு அர்ஜூன். 


மேலும் ஆங்கிலத்தில் AA என்று தன்னுடைய சிம்பளை அதில் பதித்துள்ளார். 5 கோடிக்கு வாங்கிய இந்த கேரவனுக்கு மேலும் கூடுதலாக ரூ.2 கோடியை டிசைனுக்கு செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது, “என் வாழ்க்கையில் நான் பெரிதாக எதையாவது ஒன்றை வாங்கினால், எனக்கு ஒன்றே ஒன்றுதான் என் நினைவில் தோன்றும். அது என்ன என்றால், ‘மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது' மிக்க நன்றி” என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். 

இதனை பார்த்த  Mohammad Abdul Azam என்ற நபர் Himayat Nagar பகுதியில் அந்த கேரவன் இருந்தபோது போட்டோ எடுத்து போலீசில் புகார் கொடுத்தார். அப்படி என்ன புகார் என்றுகேட்கிறீர்களா..? 

ஆம், கார்,பேருந்து போன்ற வாகனங்களில் ஒட்டப்படும் Tint அல்லது சன் கண்ட்ரோல் ஃப்லிம் அடர் கருப்பு நிறத்தில் ஒட்டக்கூடாது என்பது விதி. ஆனால், விதியை மீறி அல்லு அர்ஜுன் அடர் கருப்பு நிறத்தில் Tint ஓட்டியுள்ளார் என புகார் தெரிவித்திருந்தார் அவர். இதனை தொடர்ந்து, 735 ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமில்லாமல் ஒரு வார காலத்திற்குள் Tint Film-ஐ அகற்ற வேண்டும் என்று அல்லு அர்ஜுனுக்கு ஆர்டர் போடப்படுள்ளது.