தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகர்களை வெள்ளித்திரையில் தோன்ற வைத்து அழகு பார்த்து வரும் பிரபல தொலைகாட்சியில் 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் அறிமுகமானவர் ஜாக்குலின்.
இதை தொடர்ந்து 'ஆண்டாள் அழகர்' தொடரிலும் நடித்து பிரபலமானார். நடிப்பை தொடர்ந்து இதே பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு சீசன் 5" நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆடிசன் நடைப்பெற்றபோது அதில் கலந்துக்கொண்டு திறமையை நிரூபித்து சிறந்த தொகுப்பாளராகவும் மாறினார்.
மேலும், கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் சினிமா நடிகையாகவும் மாறினார். கோகோ படத்தில் ஹீரோயின் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு சீரியலில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார் அவர்.
விஜய் டிவியில் "தேன்மொழி" என்கிற பெயரில் வரவுள்ள சீரியலில் தான் ஜாக்குலின் நடித்துள்ளார். அதன் டீஸர் தற்போது வெளிவந்து வைரலாகியுள்ளது.



