நக்கம்பாடி கிராமத்தின் மௌனமான மாலை ஒன்றில், செந்துறை அருகேயுள்ள சிறிய வீதிகளில் காற்று மெல்லிய சோகத்துடன் வீசியது. பத்து வயது சிறுமி தனது அம்மாவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆனால் அன்று அவள் அம்மா பிரியா வீட்டுக்கு திரும்பவில்லை.
பிரியாவின் கணவன் செல்வம், கடந்த பத்து ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து கொண்டிருந்தான். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வருவான். அவன் அனுப்பும் பணத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

பிரியா தனியாகவும், குழந்தையுடனும் வாழ்ந்து வந்தாள். வீட்டின் பின்புறம் வசித்த ராஜா என்பவருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரண அக்கா-தம்பி பேச்சு. பின்னர் அது ஆழமான உறவாக மாறியது.
ராஜா, ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்துபவன். பிரியா அவனிடம் தன் கணவன் அனுப்பிய பணத்தை கடனாகக் கொடுத்து வந்தாள். அவன் அதை தன் செலவுகளுக்குப் பயன்படுத்தினான்.
ஒருகட்டத்தில், பேச்சு, நட்பை தாண்டி தொடுதல், சீண்டல்களுடன் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்தனர் பிரியாவும், ராஜாவும்.
ராஜாவின் கைகள் பிரியாவின் மீது தடையின்றி சுதந்திரமாக உலவ ஆரம்பித்தன. தனிமையின் பிடியில் இருந்த பிரியாவுக்கு ராஜாவின் அரவணைப்பு ஆறுதலை கொடுப்பதாக நம்பினால். ஆனால், அது தான் தன் வாழ்க்கையை முடிக்கப்போகும் பாசக்கயிறு என அப்போது அவள் அறியவில்லை.
விரைவிலேயே தொடுதல், சீண்டல்களை தாண்டி அடுத்த கட்டத்திற்கு இருவரும் நகர்ந்தனர். ஆள் இல்லாத நேரங்களில் ஆடைகளுக்கு விடுதலை. அடிக்கடி, தனிமையில் சந்திப்பது வழக்கமானது. வீட்டின் பின்பக்க சுவர்கள் அவர்களின் ரகசியங்களை மறைத்தன.
ஒரு நாள் செல்வம் தன் மனைவிக்கு போன் செய்தான். "நான் விடுமுறை எடுத்து ஊருக்கு வர்றேன். விரைவிலேயே பார்க்கலாம்," என்றான். அந்த செய்தி பிரியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கணவன் வருவதால் ரகசியம் வெளியாகிவிடுமோ? கொடுத்த பணம் என்ன ஆகும்? ராஜாவிடம் கேட்டால் என்ன சொல்வான்?
அடுத்த நாளே பிரியா ராஜாவின் வீட்டுக்கு ஓடினாள். "எல்லா பணத்தையும் திருப்பி தா. இப்பவே வேணும்," என்று கோபமாகக் கேட்டாள். ராஜா திகைத்துப் போனான். "இப்போ என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. கொஞ்ச நாள் பொரு, இப்போதைக்கு எதாச்சும் சொல்லி சமாளி.." என்றான்.
வாக்குவாதம் தீவிரமானது. பிரியாவின் கண்களில் கண்ணீர். "நீ என்னை ஏமாத்திட்டே... கணவன் தெரிஞ்சா என்ன ஆகும்?" என்று அலறினாள். ராஜா சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் அவள் கேட்கவில்லை.
திடீரென பிரியா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். ராஜா வெளியே நின்று கதவைத் தட்டினான். "பிரியா... திற... பேசலாம்," என்றான். பதில் இல்லை. பயம் அவனை ஆட்கொண்டது. உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தான்.
போலீசார் வந்தபோது கதவு உடைக்கப்பட்டது. உள்ளே... பிரியா தூக்கில் தொங்கிக் கிடந்தாள். அறை முழுவதும் மௌனம். அவள் உடல் சடலமாக மாறியிருந்தது.
செந்துறை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கணவன் வருவதால் கள்ள உறவும், பண மோசடியும் வெளியாகும் பயத்தில் பிரியா தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கிராம மக்களிடையே கிசுகிசுக்கள். "இது தற்கொலையா... இல்ல கொலையா?" என்ற கேள்வி எழுந்தது. ராஜா மீது சந்தேகப் பார்வை பதிந்தது. செல்வம் துபாயிலிருந்து புறப்பட்டு வரும் வழியில், தன் மனைவியின் மரணச் செய்தியை அறிந்து அதிர்ந்து போனான்.
நக்கம்பாடி கிராமம் இன்றும் அந்த மௌன சோகத்தில் மூழ்கியிருக்கிறது. ஒரு குடும்பத்தின் கனவு, ஒரு பெண்ணின் ரகசியம், ஒரு காதலின் முடிவு... எல்லாமே ஒரு தூக்குக் கயிற்றில் முடிந்துவிட்டது. போலீஸ் விசாரணை தொடர்கிறது. உண்மை எப்போது வெளியாகும் என்று கிராமம் காத்திருக்கிறது.
கள்ள உறவு ஆரம்பத்தில் சுகமான அனுபவத்தை கொடுக்கும் ஆனால், அது ஒரு குடும்பத்தை சுக்கு நூறாக உடைத்து போடும் அளவுக்கு வலுவானது என்பதை எப்போது மறக்க கூடாது. கனவிலும் வாழ்க்கைத்துணைக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதை மனதில் நிறுத்துவோம்.
Summary : In Ariyalur district's Nakkampadi village, Priya, wife of a man working abroad, developed a close relationship with neighbor Raja. Financial disputes arose when her husband planned to return. Following an argument at Raja's home, Priya was found deceased by hanging. Police are investigating the circumstances.

