விஜய்யை விமர்சிப்பவர்கள் முட்டாள்கள் - கழுவி ஊத்திய இளம் நடிகரை ரவுன்ட் கட்டிய நடுநிலை ரசிகர்கள்..!


இன்று காலை என்ன ட்ரென்ட் என பார்க்கலாம் என்று ட்விட்டரை தேய்த்தவர்களுக்கு பகீர் என இருந்திருக்கும். காரணம், #RIPactorVIJAY என ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த டேக் தான். 

உள்ளே சென்று பார்த்தால், விஜய்க்கு ஒன்றும் ஆகவில்லை. அஜித் ரசிகர்கள் சிலர் பார்த்த வேலை தான் இது. அவர்கள் ஒன்றும் வெறுமனே விஜய்யை சீண்டவில்லை. விஜய் ரசிகர்கள் நேற்று மாலை #ஆகஸ்ட்8_அஜித்திற்கு_பாடை என்று ஒரு டேக்கினை ட்ரென்ட் செய்துவிட்டு தூங்கி விட்டார்கள். 


அப்படி செய்தால் அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? தூங்கி எழுந்துவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக #RIPactorVIJAY இந்த வேலையை பார்த்து வைத்து விட்டார்கள். இப்படியே பேசிக்கொண்டு போனால் அவர்கள் தான் முதலில் சீண்டினார்கள். இவர்கள் தான் முதலில் சீண்டினார்கள் என்ற பதில் தான் கிடைக்கும். இதெல்லாம் எங்கே தொடங்கியது.? எப்போது தொடங்கியது என்றே தெரியாது..?


இப்படியே மதியம் வரை சண்டை நீடிக்க கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு டிவீட்டை பதிவு செய்து இரு தரப்பு ரசிகர்களையும் கட்டுப்படுத்தினார். இப்போது, நிலைமை சுமுகமாக உள்ளது. இந்நிலையில், திடீரென களத்தில் குதித்த நடிகரும், விஜயின் தீவிர ரசிகருமான சிபி_சத்திராஜ் அஜித் ரசிகர்களை முட்டாள்கள் என்று விமர்சித்துள்ளார். 

இதனை பார்த்த பலரும், அஜித் ரசிகர்களை மட்டும் திட்டுகிறீர்கள். அஜித்தை திட்டிய விஜய் ரசிகர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன என்று சிபி சத்யராஜை பிடித்துகொண்டார்கள். 

ஒரு எதிர்ப்பு தெரிவிக்கும் போது நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு தரப்பு ஆதரவை பெறவேண்டும் என இது போன்ற சில இளம் நடிகர்கள் நடந்துகொள்வது தவறான முன்னுதாரணம் ஆகி வருகின்றது.