அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.
இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ‘அகலாதே...’ என்ற பாடலை கடந்த வாரம் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியிருக்கிறார்.
பா.விஜய் பாடல் வரிகளை எழுத யுவனுடன் இணைந்து பிரித்வி பாடியிருக்கிறார். இந்த பாடல் கணவன் - மனைவிக்கு இடையேயான பாசம், காதல் மற்றும் புரிதலை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்ய மொத்தம் 13 ப்ரோமோ வீடியோக்களை படக்குழு சென்சார் செய்து தயாராக வைத்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் மூன்று ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ,
ப்ரோமோ 1:
ப்ரோமோ 2:
ப்ரோமோ 3:
Tags
Nerkonda Paarvai