நடிகர் விஜய்,அஜித் ரசிகர்களின் மோசமான டேக் - கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை பதிவு


சமூக வலைத்தளங்கள் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுகின்றன. தகவல்களை தொலைகாட்சி, செய்திதாள்களுக்கு முன்னர் நொடிப்பொழுதில் மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகின்றன. 

ஆனால், இப்படியான சமூக வலைத்தளங்களை சில சினிமா நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போடும் மைதானமாக மாற்றிக்கொள்வது வேதனையான விஷயம். அந்த வகையில், சமூக வலைதள சண்டையில் முன்னணியின் இருப்பது அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை தான். 


அந்த வகையில், இது நாள் இல்லாத அளவுக்கு விஜய் மற்றும் அஜித் குறித்து மோசமான டேக்கை உருவாக்கி இருதரப்பு ரசிகர்களும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இதனை பார்த்த கிரிகெட் வீரர் அஸ்வின் தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார். 


அவர் கூறியுள்ளதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு விண்கல் ஒன்று நம் உலகை தாக்க இருந்தது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதமான பருவநிலைகள் பாதிப்புக்குள்ளாகி வந்து கொண்டிருகின்றது. இந்தியா முழுதும் மனதை உலுக்கும் பல கிரிமினல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதெல்லாம் பேசப்படவேண்டிய விஷயங்கள். ஆனால், அன்பு மிகுந்த நம் மாநிலத்தின் இளம் தலைமுறையினர் #RIPactorVijay என்பதை ட்ரென்ட் செய்வதில் குறிக்கோளாக உள்ளனர். என்று வேதனையுடன் தெரிவத்துள்ளார்.