கர்லிங் முடியும், இனிமையான குரலும் பறிபோனது எப்படி..? - மொட்டை ராஜேந்திரன் வெளியிட்ட தகவல்


2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துவந்தார் ராஜேந்திரன். 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற எதிர் நாயகன் வேடத்தில் கரகரத்த குரலி பேசி மிரட்டியதன் மூலமாக புகழ்பெற்றார். 

தற்போது துணை மற்றும் எதிர் வேடங்களில் நடித்து வருகிறார. சினிமாவில் நடிகராக அறிமுகமான காலத்தில் இருந்து மொட்டை ராஜேந்திரன் ஆரம்பகாலத்தில் சுருட்டை முடியுடனும், இனிமையான குரலுடனம் தான் இருந்திருக்கிறார். தான் ஒரு ஸ்டண்ட் மேன் என்பதால் எந்த ஒரு ஆபத்தான ஸ்டண்டையும் தைரியமாக செய்வாராம். 


மலையாள படம் ஒன்றின் சண்டை காட்சிக்காக அவர் 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதித்தாராம். வயநாடு கல்பட்டாவில் தான் ஷூட்டிங் நடந்துள்ளது. அவர் தண்ணீரில் குதித்து வெளியில் வந்த பின்னர் தான் அந்த கிராம மக்கள் 'அது  குளம் அல்ல. ரசாயன ஆலை கழிவு நீர் தேங்கும் குட்டை' என கூறியுள்ளனர். 


அதிர்ந்த போனார் ராஜேந்திரன். ஏம்பா.. இத மொதல்லையே சொல்ல கூடாதா..? என்று கேட்டுள்ளார். சரி சரியாகிவிடும் என்றிருந்தார் அவர். ஆனால், சில மாதங்களில் கழித்து தலையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிறிய அளவில் பொடுகு வந்துள்ளது. மேலும், அந்த குளத்தின் நீர் தவறுதலாக வாய்க்குள் சென்று விட்டதால் அவரது குரலும் மெல்ல மெல்ல கரகரக்க தொடங்கியுள்ளது. அந்த பிரச்சனை பெரிதாகி உடம்பில் இருந்த அனைத்து முடிகளும் கொட்டி, குரல் கரகரத்து விட்டது என ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, அந்த குளத்தில் இவர் குதிக்காமல் இருந்திருந்தால் இவர் இவ்வளவு பெரிய நடிகராக மாறியிருப்பரா என்பது சந்தேகம் தான். காரணம், இன்று இவரது அடையாளமே மொட்டை தலையும், கரகரக்கும் குரலும் தான். அந்த வகையில், அந்த ராசாயன கழிவு நீர் இவருக்கு நல்லது தான் செய்துள்ளது.
ஹே.. சூப்பர் பா..!