பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா பன்சோலி தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.முன்னணி பாலிவுட் நடிகை ஒருவர்.
இந்நிலையில் அவர் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.கடந்த 2004-ம் ஆண்டு தான் நான் ஆதித்யா-வை சந்தித்தேன். பட வாய்ப்புக்காக வந்த என்னை பார்ட்டிக்கு அழைத்து சென்றார். அங்கே நான் மது அருந்திய பிறகு வழக்கத்திற்கு மாறான மயக்கம் வருவதை நான் உணர்ந்தேன்.
நானே உன்னை உன் ஹாஸ்டலில் விட்டு விடுகிறேன் என்று கூறினார் ஆதித்யா. ஆனால், செல்லும் வழியில் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு என்னை தகாத இடங்களில் தொட்டு தடவி அதனை புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.



