என்னோட அந்த உறுப்பு தளர்ந்துவிட்டது.. இது தான் சரியா இருக்கும்.. கூச்சமின்றி கூறிய நடிகை சமீரா ரெட்டி!
நடிகை சமீரா ரெட்டி தனது உடல் தோற்றம், உடல் எடை மற்றும் வயது தொடர்பான விஷயங்களில் நேர்மறையான பார்வையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் செய்திகள் பலருக்கும் உத்வேகமாக அமைகின்றன. ஒருவரின் உடலை வைத்து தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது, தன்னை குறைவாக எடை போட்டுக்கொள்ளக் கூடாது என்பதே அவரது நிலைப்பாடு. ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அது அவர்களின் அடையாளம். அதை கொண்டாட வேண்டும். உயிரைத் தாங்கி நிற்கும் உடலை வெறுக்கக் கூடாது. நாம் குண்டாக இருக்கிறோம் அல்லது மிகவும் ஒல்லியாக இருக்கிறோம் என்ற காரணத்தால் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்ளும் போக்கும், பிறரின் உடலை வைத்து கேலி செய்யும் போக்கும் இருக்கக் கூடாது என அவர் வெளிப்படையாக பேசி வருகிறார். கடந்த காலத்தில் அவர் பகிர்ந்த ஒரு கருத்து இன்னும் நினைவில் இருக்கிறது. “என்னுடைய தொடைகள் தளர்ந்துவிட்டன. என்னுடைய முடி நரைத்துவிட்டது. என்னுடைய தோளில் சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஆனாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன். என்னை அழகாக உணர்கிறேன்” என கூறியிருந்தார். அந்த நேர்மையான...