வெற்றிவேல் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நிகிலா விமலா இது..? - வைரல் புகைப்படங்கள்


'வெற்றிவேல்' படத்தில் அறிமுகமாகி, "உன்னைப்போல ஒருத்தரை நான் பார்த்ததே இல்ல..." என்ற பாடலின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர், நிகிலா விமல். "மலையாளம்தான் என்னோட தாய்மொழி. இருந்தாலும் மலையாளத்தைவிட, தமிழ் இப்போ சூப்பரா பேசுவேன்" என்கிறார். 

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக ’வெற்றிவேல்’ மட்டுமில்லாமல் ‘கிடாரி’ படத்திலும் நடித்தவர் நடிகை நிகிலா விமல். கேரளத்து நடிகையான இவர், அதற்கு முன்பே மா.கா.பா.ஆனந்துடன் ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் தற்போது வெளியாகி வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது. .


இந்நிலையில், தற்போது சிபிராஜ் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கும் நிகிலா, கிளாமருக்கு முழு தடை விதித்து நடித்து வருவதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து நடிகை நிகிலா விமலாவை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘என்னைப்பொறுத்த வரை கதைகளை ஒருபோதும் நான் கிளாமர், ஹோம்லி என்று தரம் பிரிப்பதில்லை. 


அதோடு, இதுவரை என்னிடம் கிளாமராக நடிக்க வேண்டும் என்று எந்த இயக்குனரும் கேட்டதுமில்லை. என்னைத்தேடி வந்ததெல்லாமே ஹோம்லியான வேடங்கள்தான். மேலும், எனக்கும் கிளாமர் கலந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைதான். கிளாமர் என்று வரும்போது முகம் சுழிக்காத கிளாமரை வெளிப்படுத்தி நடிப்பேன் என்று கூறி வந்தார் நிகிலா விமல். 

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் மாடர்ன் உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள், 




Previous Post Next Post