இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே விஸ்வாசம், பேட்ட என இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்களுடன் ரசிகர்களை வரவேற்த்தது தமிழ் சினிமா. வருடத்திற்கு 200+ படங்கள் கொடுக்கும் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் படங்கள் என்றால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம்.
பணம் இருக்கு, படம் எடுப்போம், நஷ்டக்கணக்கு காட்டி வரி கட்டுவதில் இருந்து எஸ்கேப் ஆவோம் என்று சில பல பண முதலைகளும், இந்த படத்தை தயாரித்தேன் அதன் மூலம் வந்த வருமானம் இது கருப்பு பணத்தை வெள்ளையடிக்க சில பண முதலைகளும் சினிமாவை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ஐந்து கோடி, பத்து கோடி, ஐம்பது கோடி என பணத்தை கொட்டுகிறார்கள். வந்தால் லாபம், போனாலும் லாபம் தான். சினிமா தயாரிப்பாளர், நடிகர் என்ற அடையாளம் வேறு கிடைக்கிறது என்று பல முதலாளிகள் பணத்தை இறக்கி விளையாடுகிறார்கள்.
ஆனால், சினிமாவையே தொழிலாக வைத்துள்ள சில தயாரிப்பளர்கள் தான் நல்ல கதை மற்றும் ஹீரோவை தேர்வு செய்து லாபம் ஒன்றை நோக்கமாக கொண்டு ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் படங்களை தயாரிகிறார்கள். அப்படியான படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெறுகின்றன.
அந்த வகையில், இந்த வருடத்தில் இதுவரை மட்டும் 130+ படங்கள் ரிலீஸ் ஆகி விட்டன. இந்நிலையில், தமிழக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பட்டியலை தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.
பட்டியலில், தமிழக அளவிலான வசூல் கணக்குகள் அடிப்படையில் மட்டுமே ரேங்க் செய்யபட்டுள்ளது.
- விஸ்வாசம்
- பேட்ட
- நேர்கொண்டபார்வை
- காஞ்சனா-3
- அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் (Tamil Dubbed Version)