அஜித்தின் 60-வது படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச்.வினோத்தே இயக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்த போனி கபூர் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
படம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த போனி கபூர், “தல 60 படத்தில் அஜித், அஜித்தாகவே இருப்பார். படத்தில் ரேஸிங் காட்சி, ஸ்போர்ட்ஸ் என்று அவருக்கு பிடித்த அனைத்தும் இருக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. இந்த கெட்டப் ‘தல 60’ படத்துக்கான கெட்டப்பாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற உள்ளதாகவும், 2020-ம் ஆண்டின் பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, நேர்கொண்ட பார்வை படத்தை போலவே எந்த வித வீண் தாமதமுமின்றி படப்பிடிப்பு தொடங்கிய ஒரே வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பை வெளியிட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
பத்திரிக்கை மற்றும் வலைதளங்களில் படம் குறித்து தகவல்கள் வெளியாகும் போது வெறுமனே தல60, தல60 என்று பயன்படுத்தாமல் படத்தின் தலைப்பையே பயன்படுத்த இது வழிவகுக்கும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.