தல 60 படத்தில் வில்லன் இவரா..? - ரசிகர்கள் ஏமாற்றம்..!


இயக்குனர், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கும் பெயரிடப்படாத அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29 முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29 முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுவதும் தென் ஆப்பிரிக்கா பகுதியில் எடுக்க உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், இந்தபடத்தில் வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அருண் விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் , ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Previous Post Next Post
--Advertisement--